சென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே,  டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில்  ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்

புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்கீடு – அமைச்சர் செங்கோட்டையன்

128 பள்ளிகளுக்கு 192 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்படும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 லட்சமும் வழங்கப்படும். 192 ஆசிரியர்களுக்கு 10,000 வீதம் 19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த  காமராசர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு …

Continue reading புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்கீடு – அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பிளஸ் 1 தேர்வில், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5ல் துவங்க உள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியானது. இதில், 8.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணை தேர்வு எழுதலாம். அவர்களுக்கு, ஜூலை, 5 முதல் சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மதிப்பெண் பட்டியல் எப்போது: தேர்வு எழுதியவர்கள், …

Continue reading பிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

நூலகங்களில், ‘WIFI’ ; ஆசிரியர்களுக்கு, ‘BIOMETRIC’

'அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு, 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார். சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவுகள், மின்னணு வருகைப் பதிவு எனப்படும், 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். அதற்கு, ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்படும்.அரசு பள்ளிகளில், 6.23 கோடி ரூபாய் மதிப்பில், நுாலகங்கள் அமைக்கப்படும்.மாணவர்கள், திறன் சார்ந்த கல்வியை பெறும் …

Continue reading நூலகங்களில், ‘WIFI’ ; ஆசிரியர்களுக்கு, ‘BIOMETRIC’

SC, ST – மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:– கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து திரும்ப பெற முடியாது என்று கல்வி உதவித்தொகை திட்ட வழிகாட்டி விதியில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக அளவில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவர்களால் ‘மெரிட்’ மூலம் அரசு இடஒதுக்கீட்டை பெற முடியாது. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் …

Continue reading SC, ST – மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

பிளஸ் 1 பொது தேர்வு – 85 சதவீதம் தாண்டவில்லை

பிளஸ் 1 பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்ததால், 90 சதவீதத்துக்கு அதிகமாக, மிக சிலரே மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர்களும், 85 சதவீதத்தை தாண்டவில்லை.ஆண்டு தோறும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், முடிவு எப்படி இருக்கும்; அதில், யார் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள, பெற்றோர், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரும் ஆர்வமாக இருப்பர்.இந்த ஆண்டு, பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், பிளஸ் 1ல் …

Continue reading பிளஸ் 1 பொது தேர்வு – 85 சதவீதம் தாண்டவில்லை

பிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் திணறல்

பிளஸ் 1 தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்து, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. இதில், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வழக்கம் போல், ஆதிக்கம் செலுத்தின. ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் இரண்டாம் இடத்திலும், தனியார் பள்ளிகள், மூன்றாம் இடமும் பெற்றன.பிளஸ் 2வில் முன்னிலைக்கு வரும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1 பொது தேர்வின் கடின வினாத்தாளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. ரயில்வே பள்ளிகளும், …

Continue reading பிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் திணறல்

Teachers Transfer Counseling – விண்ணப்பங்கள் எப்போது பெறப்படும்?

கலந்தாய்வு செய்தி: ஜூன் 10 க்குள் விண்ணப்பம் பெறப்படும். ஜூன் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது