2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக்கட்டிடங்கள்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது உயர்நீதிமன்றம்…!!

2011-க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து,  நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



*மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிக் கட்டிடங்களின்  திட்ட அனுமதியை சமர்ப்பிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளை அறிவுறுத்தி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளிக் கல்வித் துறை அரசாணையை பிறப்பித்தது*


*இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி  தனியார் பள்ளிகள் சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன*


*இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ராஜா,  2011-ம் ஆண்டுக்கு பின்பு கட்டப்பட்ட பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று தான் கட்டப்பட்டுள்ளதால், அந்த கட்டிடங்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது என  கூறி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்*

Leave a comment