ஒவ்வொரு ஒன்றியத்திலும் ‘சிங்கிள் டிஜிட்’ காலியிடங்களே உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்

ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்களாக 3,170 உள்ளன. சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டன. இந்த உபரி பணியிடங்களில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 541 பணியிடங்கள் காலியாக உள்ளன. 1,992 உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்றப்படுவர்.இதனால் 3,170 காலிப்பணியிடங்கள், 1,178 ஆக …

Continue reading ஒவ்வொரு ஒன்றியத்திலும் ‘சிங்கிள் டிஜிட்’ காலியிடங்களே உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்

சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்றதிட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும்மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்படஅனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்தஇரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதிஒதுக்கப்பட்டு வருகிறது. இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டுதிட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்விதிட்டத்தையும் ஒன்றாக இணைப்பது  குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கானஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர்நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும்ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்ததிட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும்.இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும்.கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்புபாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார்.   தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால்,அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன்தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதியபாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிஇயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்பதமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது.அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்தபணிகளை கவனித்து வருகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர்கூறியதாவது:வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள்திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுஅந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள்அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள புத்தகத்தைவிட அதிக பக்கங்கள்இருக்கும். நிறைய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். 9 மற்றும்11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடங்கள்உள்ளன. பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முன்பாகஅனுப்பப்பட்டுவிடும்.பக்கங்கள் அதிகமாக இருப்பதால் புத்தகங்கள்பிரிந்துபோகாமல் இருக்க முன்பைவிட கனமான, பளபளப்பான அட்டையால்பைண்டிங் செய்யப்படுகிறது. புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்தால் பக்கங்கள்பிரிந்துபோகாது என்பதால் லேமினேசன் செய்து வழங்கலாமா? என்று அரசுஆலோசித்து வருகிறது.  

வருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு!

சென்னை 'வரும், 31க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யமுடியாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். கடந்த, 2015------ - 2016 மற்றும், 2016 - 2017ம் ஆண்டுகளுக்கான வருமானவரிக்கணக்கை, நாளைக்குள் தாக்கல் செய்வதற்கான பணிகளை, வருமான வரி செலுத்துவோர், துரித கதியில் செய்து வருகின்றனர்.இந்த நிலையில், சென்னை,நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், வருமான வரி தாக்கல்செய்பவர்களுக்கு, உதவி செய்வதற்காக, துறை சார்ந்த, 30பணியாளர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இணையதளம் வழியாக தாக்கல் செய்யமுடியாதவர்களுக்கு, வருமான வரிக் கணக்கை தயார் செய்து கொடுக்க, தனியார்நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கான சிறப்பு கவுன்டர்கள், 22ம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகின்றன.   இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரண்டுநிதியாண்டுகளுக்கான, வருமான வரி கணக்கை, நாளைக்குள் செலுத்தவேண்டும் என்பதற்காக, அரசு விடுமுறை தினங்களிலும், வருமான வரிஅலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல், நடப்பு நிதியாண்டுவருமான வரி கணக்கை, அடுத்த ஆண்டுக்குள் செலுத்தும் நடைமுறையை,மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.அதாவது, 2017 - 18ம் ஆண்டுக்கானவருமான வரியை, 2018 ஜூலை, 31க்குள் செலுத்த வேண்டும்; அதற்குப் பின், 2019 மார்ச், 31க்குள் செலுத்து வோருக்கு, 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய்வரை, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சட்ட திருத்தத்தை, மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.மேலும், நாளைக்குள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத்தவறுபவர்கள், இனி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேமுடியாது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர். கணக்கு தாக்கல் கட்டாயம்மாத ஊதியம் பெறுபவர்கள் சம்பளத்திலிருந்து, 10சதவீத தொகை, டி.டி.எஸ்., என்ற வருமான வரிப் பிடித்தமாக, சம்பந்தப்பட்டநிறுவனத்தால் பிடிக்கப்படுகிறது. இவ்வாறு, டி.டி.எஸ்.,செலுத்துவோர்,வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை என, கருதுகின்றனர்.ஆனால், வரும் ஆண்டில் இருந்து, டி.டி.எஸ்., செலுத்தும் நபர்களுக்கும்,வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்தத்தை, மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது;அவ்வாறுகணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, 1,000 ரூபாய் முதல், 10 ஆயிரம்ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.20லட்சம் பேருக்கு கடிதம்!வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு,வருமான வரி அலுவலகம், தொடர்ந்து, நினைவூட்டல் கடிதம் அனுப்பிவருகிறது. இந்த நிலையில், 31ம் தேதி கடைசி என்பதால், அதற்கு முன்,வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு, இந்த மாதம் மட்டும், 20 லட்சம்பேருக்கு, நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, அதிகாரிகள்தெரிவித்தனர்.

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்-Dailythanthi

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும்.அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில்எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்குபயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாகபள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சிஅளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது.ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது.கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள்திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சிஅளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும். மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்குபுரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல்படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள்எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்தஅளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம்கற்பிக்க வேண்டி இருக்கும்

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்தியஇன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரகவாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை, இந்திய இன்சூரன்ஸ்ஒழுங்குமுறை ஆணையம் கடுமையாக உயர்த்தி நேற்று முன்தினம் உத்தரவுபிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, 151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட இருசக்கரவாகனங்களுக்கு ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது 11 சதவீத உயர்வு. 350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்குரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,304அதிகம் ஆகும். அதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய சரக்கு லாரிகளுக்குரூ.24 ஆயிரத்து 190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்தஆண்டை விட ரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு ஆகும். 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள(6 சக்கர லாரி) வாகனங்களுக்குரூ.32 ஆயிரம் 367 நிர்ணயம். இது கடந்த ஆண்டை விட ரூ.3,468 அதிகம்.அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது. 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்)வாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 ஆகும். கடந்த ஆண்டை விட ரூ.8ஆயிரத்து 223 அதிகம் ஆகும். இது 26 சதவீத உயர்வு ஆகும். 40 ஆயிரத்திற்குமேல் எடையுள்ள வாகனங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 308நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5,284 அதிகம். அதாவது16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள் செல்லக்கூடிய வாகனம்ஆகியவற்றுக்கும் 17 சதவீதம் வரை இன்சூரன்ஸ் கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளது