போதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை முழுமையாக ஒப்படைத்த 22 பொறியியல் கல்லூரிகள்

மாணவா் சோ்க்கை இல்லாத காரணத்தால் 22 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தங்களிடமுள்ள நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் முழுவதையும், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வுக்கு ஒப்படைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவா் சோ்க்கையை நடத்தி வருகிறது. இந்த முறை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் இடங்களை நிரப்ப உள்ளது. அரசுக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அவற்றில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பி.இ. இடங்களும் கலந்தாய்வு …

Continue reading போதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை முழுமையாக ஒப்படைத்த 22 பொறியியல் கல்லூரிகள்

2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் இல்லை

2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் இல்லை -சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி), கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து …

Continue reading 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் இல்லை

தமிழக அரசு ஊழியர்களுக்கு… நான்காம் ஆண்டிலேயே வீட்டுக் கடன்!

 ‘வீட்டுக் கடன் பெறுவதற்குக் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்’ என்ற விதியை மாற்றி, ‘நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால் போதும்’ என்கிற புதிய அரசாணைக் கொண்டு வந்திருப்பதன்மூலம் இன்னும் அதிகமானவர்கள் சொந்த வீடு வாங்க வழி செய்துதந்திருக்கிறது தமிழக அரசாங்கம்.   கடந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டுக் கடன்மீது அடுத்தடுத்து நான்கு சலுகைகளைத் தந்து ஆச்சர்யப் படுத்தியது  தமிழக அரசு. அந்த நான்கு என்னென்னவெனில், 1. வீடு கட்டும் கடன் வரம்பு ரூ.15 …

Continue reading தமிழக அரசு ஊழியர்களுக்கு… நான்காம் ஆண்டிலேயே வீட்டுக் கடன்!

‘மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை’

புதுடில்லி: 'மதிய உணவு திட்டத்தில் பயனடையும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, ஒவ்வொரு மாதமும் அளித்தால் தான், நிதியுதவி வழங்கப்படும்' என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் நிதிஉதவியின் கீழ், மாநில அரசு பள்ளிகளில், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எண்ணிக்கை மாநில அரசு அளிக்கும் மாணவர் எண்ணிக்கையை வைத்து, நிதிஉதவி அளிக்கப்படுகிறது. ஆனால், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாததால், சராசரி எண்ணிக்கையை, மாநில அரசுகள் அனுப்பி, அதிகஅளவு நிதியை பெறுகின்றன.இது குறித்து, …

Continue reading ‘மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை’