தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு???

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளி்ல் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடன் பதவி உயர்வில் நிரப்ப உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்     தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.கலந்தாய்வு தேதி இந்த வாரமே அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. என்பதை தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறோம்.

மே 8ல் கோட்டை முற்றுகை: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியர் மன்ற பொது செயலாளருமான க.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோருக்கு உள்ள ஊதிய முரன்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச …

Continue reading மே 8ல் கோட்டை முற்றுகை: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்

தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் நுழைவு தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்ற சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 12-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை: மார்ச் 12-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

CPS NEWS: CPS வல்லுநர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள் குறித்து RTI சட்டப்படி தகவல் வழங்க இயலாது.

*இன்று வரை CPS வல்லுநர் குழுவால் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படவில்லை.* *20.12.2017க்கு பிறகு வல்லுநர் குழு கூட்டம் நடைபெறவில்லை.* *வல்லுநர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள் குறித்து RTI சட்டப்படி தகவல் வழங்க இயலாது.* *தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்.*

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடி நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெற்றது . 2017ம் ஆண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், தமிழகத்துக்கு விலக்கு தர முடியாது என மத்திய அரசு வாதிட்டதால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் …

Continue reading எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில் பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை!!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் விடுமுறை விடப்படுகிறது என தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. #WomensDay #Telangana ஐதராபாத்: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் பெண்களை கவுரவிக்கும் விதமாகவும் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது …

Continue reading சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில் பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை!!!

பெண்களுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருது!

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு உயரிய விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காகப் போராடிய தன்னார்வ அமைப்புகளுக்குப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பாக பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக நாரி சக்தி புரஸ்கார் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தனிநபர், …

Continue reading பெண்களுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருது!